சமீபத்தில் ரிலீஸன அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கே அந்த படம் பிடிக்கவில்லை. அதனால் அவரின் அடுத்த ரிலீஸான குட் பேட் அக்லி மேல் ரசிகர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த டீசரைப் பாராட்டியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “டீசர் முழுக்கவும் எனர்ஜி மற்றும் அஜித் சாரின் லுக்கில் டார்க் ஷேட் வெளிப்படுகிறது. இயக்குனர் ஆதிக் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.