Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் டைட்டில் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்..!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (11:22 IST)
அஜித் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தின் அறிவிப்பு நாளை மறுநாள் அதாவது மே ஒன்றாம் தேதி அவருடைய பிறந்தநாளின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
லைகா நிறுவனம் அன்றைய தினம் அஜித்தின் 62வது படத்தின் டைட்டில் அறிவிக்க இருப்பதாகவும் அதன் பிறகு ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’விடா முயற்சி’ என்று சமூகவலைதளங்களில் கசிந்து வருகிறது. இந்த டைட்டிலை படக்குழுவினார் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவும் மே ஒன்றாம் தேதி டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது 
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

அடுத்த கட்டுரையில்