Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.. இரங்கல் தெரிவிப்பாரா அஜித்?

Advertiesment
அஜித்தின் நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.. இரங்கல் தெரிவிப்பாரா அஜித்?
, சனி, 29 ஏப்ரல் 2023 (10:25 IST)
அஜித்தின் நெருங்கிய நண்பரும் அஜித்தின் பல படங்களை தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
அஜித் நடித்த ’ராசி’, ’வாலி’, ’முகவரி’, ’சிட்டிசன்’, ’ரெட்’, ‘வில்லன்’, ’ஆஞ்சநேயா’, ’ஜீ’ , ‘வரலாறு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர்  நிக் ஆர்ட்ஸ்  சக்கரவர்த்தி என்பதும் அவர் அஜித்தின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே நட்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த  நிக் ஆர்ட்ஸ்  சக்கரவர்த்தி நேற்று இரவு காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நண்பரின் இறுதி சடங்கில் அஜித் கலந்து கொள்வாரா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராசியில்லாத நடிகை என ஓரம்கட்டிய தமிழ் சினிமா… இப்போது கமல் படத்தில் ஹீரோயின்!