Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா?... தயாரிப்பாளர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா?... தயாரிப்பாளர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!
, சனி, 29 ஏப்ரல் 2023 (13:57 IST)
அஜித்தின் நெருங்கிய நண்பரும் அஜித்தின் பல படங்களை தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் நடித்த ’ராசி’, ’வாலி’, ’முகவரி’, ’சிட்டிசன்’, ’ரெட்’, ‘வில்லன்’, ’ஆஞ்சநேயா’, ’ஜீ’ , ‘வரலாறு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர்  நிக் ஆர்ட்ஸ்  சக்கரவர்த்தி என்பதும் அவர் அஜித்தின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ரத்தமும் சதையுமாக இருந்த இருவரும் ஒரு கட்டத்துக்குப் பிறகு பிரிந்தனர். அதன் பின்னர் இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த  நிக் ஆர்ட்ஸ்  சக்கரவர்த்தி நேற்று இரவு காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ள நிலையில் அஜித் தன்னுடைய உலக சுற்றுலா பயணத்தில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சக்ரவர்த்தியின் மறைவுக்கு மூத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டில்
“நண்பா!
நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி!
மறைந்துவிட்டாயா?

அஜித்தை வைத்து நி தயாரித்த
வாலி, முகவரி, சிட்டிசன்,
ரெட், வில்லன், ஆஞ்சநேயா
வரலாறு ஆகிய 7 படங்களுக்கும்
என்னையே எழுத வைத்தாய்

தமிழ்க் காதலா!

காசோலைகள்
வந்த இடத்திலிருந்து
சாவோலையா?
கலங்குகிறேன்;

கலையுலகம் உன் பேர்சொல்லும்" எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலய்யா ஜீப்பையே பறக்கவிடலாம்… நான் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” – ரஜினிகாந்த் கலாய்!