தமிழ் சினிமாவில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார், இன்று நயன் தாரா – விக்கியின் குழந்தைகளை நேரில் சென்று பார்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன் தாரா. இவர் கடந்த மே மாதம் அவரது காதலர் விக்னேஷ் சிவனனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் முதலிலேயே ரிஜிஸ்டர் திருமணம் செய்ததாகவு, அதன் அடிப்படையில், ஒர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி, இதில், விதி மீறவில்லை என்ற தகவலை அரசு தெரிவித்தது.
இதனால், திருமணமான 4 மாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டதாக எழுந்த சர்ச்சையும் ஓய்ந்தன.
தற்போது தன் குழந்தைகளைக் கவனித்து வரும் நயன் தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியரை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து, குழந்தைகளையும் பார்த்து வந்துள்ளார் நடிககை ராதிகா சரத்குமார்.
இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Edited by Sinoj