Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது வேட்டையன் 2-வது சிங்கிள்! ஹேய் சூப்பர் ஸ்டாருடா…#HunterVantaar பாருடா…”

Mahendran
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (12:56 IST)
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தின் புதிய பாடல் ‘Hunter Vantaar’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

'ஜெய்பீம்' புகழ் ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள  வேட்டையன்  திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இன்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் ‘Hunter Vantaar’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையே, படக்குழு தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் கதாபாத்திரங்கள் முன்னதாகவே வெளியிடப்பட்ட நிலையில், நேற்று அமிதாப் பச்சன் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லால் படத்துடன் க்ளாஷ்… வசூலில் கலக்கும் கல்யாணி ப்ரியதர்ஷனின் ‘லோகா’!

சிம்பு படம் என்னாச்சு?... எப்ப அறிவிப்பு வரும்?- வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

கார் ரேஸை ப்ரமோட் பண்ணுங்க… என்னை இல்ல – ஜெர்மனியில் அஜித் பேச்சு!

தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கார்ஜியஸ் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments