Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டையன் ரிலீஸ்வரை விடாமுயற்சி டீசர் வராதா?... அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் லைகா!

வேட்டையன் ரிலீஸ்வரை விடாமுயற்சி டீசர் வராதா?... அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் லைகா!

vinoth

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:51 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து சில போஸ்டர்கள் ரிலீஸானதைத் தவிர வேறு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டீசரை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அதன் ரிலீஸ் முடிந்தபின்னர்தான் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 44 படத்துக்காக சென்னையில் உருவாகும் அந்தமான் செட்!