Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுதான்: லைகாவின் அதிரடி அறிவிப்பு..!

’தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுதான்: லைகாவின் அதிரடி அறிவிப்பு..!
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 170’

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு வேட்டையன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டராக வேட்டையன் என்ற கேரக்டரை ஏற்று நடித்த ரஜினிகாந்த் இந்த படத்தில் முழுவதுமாக அந்த கேரக்டரை ஏற்று நடித்துள்ளார்

ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள இந்த படம் ’ஜெயிலர்’ என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின்னர் வெளியாக உள்ள திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேட்டையன் என்ற டைட்டிலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கோயில் சிலைக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்