Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Advertiesment
Relief Goods
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (16:09 IST)
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தன் 73 வது பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையால், சென்னையில் உள்ள  பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.  மக்களின் இயல்பு வாழ்க்கையயும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு  அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.

இதில், நடிகை  நயன்தாரா, நாடு படக்குழுவினர், விஜய் டிவி பாலா,  விஜய் மக்கள் இயக்கத்தினர் என பலரும் மக்களுக்கு உதவிய நிலையில் , இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக்ஜாம் புயல் மற்றும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை இல்லாத எதிர்ப்பு எதிரொலி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா கமல்?