Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் முதல் நாளில் வேட்டையன் வசூலித்தது இவ்வளவுதானா?

தமிழ்நாட்டில் முதல் நாளில் வேட்டையன் வசூலித்தது இவ்வளவுதானா?

vinoth

, வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:29 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையிலேயே சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். ஒரு தரப்பினர் ரஜினி படம் போலவே இல்லை என்று அங்கலாய்க்க, மற்றொரு தரப்பினர் ரஜினியை இயக்குனர் வித்தியாசமாகக் காட்டியுள்ளார் என்று பாராட்டினார்.

ஆனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்துக்குக் கிடைத்த முதல் நாள் வரவேற்பு வேட்டையன் படத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறைவான திரைகளில் வேட்டையன் ரிலீஸானதே இதற்கு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. உலகளவில் 60 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!