Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth

, வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:17 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம். மேலும் அசோக் செல்வனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரஞ்சித் கான்ஸ் திரைப்பட விழாவில் போஸ்டர் வெளியிட்ட ‘வேட்டுவம்’ படம் என சொல்லப்படுகிறது. இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேட்டையன் படக்குழு சம்மதம்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்!