களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில்தான் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் குறிப்பிடத்தக்க ஒரு சீரிஸாக விலங்கு அமைந்தது.
இதையடுத்து இப்போது அதே குழு மீண்டும் ஒரு வெப் சீரிஸ்க்காக களமிறங்கியுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய வெப் சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளது.