Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் இயக்குனரின் புதிய படம்… முன்னணிக் கதாநாயகி ஒப்பந்தம்!

வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் இயக்குனரின் புதிய படம்… முன்னணிக் கதாநாயகி ஒப்பந்தம்!
, திங்கள், 14 மார்ச் 2022 (16:34 IST)
இயக்குனர் அறம் கோபி இயக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்தது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இதையடுத்து இயக்குனர் அறம் கோபி இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அறம் படத்துக்கு பிறகு கோபி ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ்ரூட் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸார்..