Publish Date: Mon, 14 Mar 2022 (09:57 IST)
Updated Date: Mon, 14 Mar 2022 (10:00 IST)
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அமெரிக்கா இந்தியா அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது