Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியின் அடுத்த படத்துக்கு கதை எழுதும் வெற்றிமாறன்… இயக்குனர் இவரா?

சூரியின் அடுத்த படத்துக்கு கதை எழுதும் வெற்றிமாறன்… இயக்குனர் இவரா?
, புதன், 26 ஏப்ரல் 2023 (08:19 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரைசெந்தில்குமார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச் சட்டை திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பிறகு தனுஷை வைத்து கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் அவரின் அடுத்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் அவர் லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து படம் இயக்குவதாக இருந்து எதுவும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சூரியின் மேலாளர் தயாரிக்க உள்ளதாகவும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்று பொறுப்புகளை இயக்குனர் வெற்றிமாறனே ஏற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இதுபோல சில படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் மணிரத்னம் படத்தின் ப்ரமோஷன் வீடியோ ஷூட்டிங்… எப்போது தெரியுமா?