ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

Siva
புதன், 13 ஆகஸ்ட் 2025 (18:14 IST)
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான இரண்டு படங்கள் சென்சாரில் சிக்கியிருப்பதால், கிட்டத்தட்ட ரூ.20 கோடி முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கோபி நாயனார் இயக்கிய ‘மனுஷி’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட் கேர்ள்’ ஆகிய இரு திரைப்படங்களும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களை சந்தித்துள்ளன. சென்சார் அதிகாரிகள் இரு படங்களிலும் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளதால், அவற்றின் வெளியீடு தாமதமாகியுள்ளது.
 
சென்சாரில் ஏற்பட்ட சிக்கலால் தனது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வெற்றிமாறன் இப்போது ‘பேட் கேர்ள்’ படத்தை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் முடங்கியுள்ள ரூ.20 கோடியை மீண்டும் பெற்றால் மட்டுமே, அவரது நிதிநிலை சீராகும் என்று கூறப்படுகிறது. இதனால், ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டிற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது.
 
இதனால், ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிட வெற்றிமாறன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியின் மூலம், தயாரிப்பாளராக அவர் எதிர்கொண்டிருக்கும் நிதி சிக்கல்களுக்கு ஒரு தீர்வை காண அவர் முயற்சிப்பதாக தெரிகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments