Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்? வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:20 IST)
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை முன்னணி விநியோகஸ்தரான சிபுதமீன்ஸ் பெற்றுள்ளார். இவர் இந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை கேரளாவில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகம் “விக்ரம் படம் போன்ற ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும்” என சொல்லப்படுகிறது. இதை சமீபத்தில் படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நேர்காணலில் உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments