Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பட தலைப்பு இதுதான்

Advertiesment
vendhu thanitathu kadu
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (16:58 IST)
வெந்து தணிந்தது காடு படத்தை தெலுங்கின் வெளியிடுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்போது ரிலீஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னை பல்லாவரத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வு இப்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படம் தெலுங்கில் தி லைஃப் ஆஃப் முத்து என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராமின் சொந்த நிறுவனமான ஷரவந்தி ரிலீஸ் செய்யவுள்ளது.

இப்படம் அங்கு வெற்றி பெறும் என கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவகாசம் முடிந்தது: சொத்து விவரங்களை தாக்கல் செய்தாரா நடிகர்?