வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மலையாள ரிலீஸ்… உரிமையைக் கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (08:53 IST)
வெந்து தணிந்தது காடு திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை முன்னணி விநியோகஸ்தரான சிபுதமீன்ஸ் பெற்றுள்ளார். இவர் இந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை கேரளாவில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments