Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் வரவேற்பை அடுத்து ரிலீஸுக்குத் தயாராகும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம்!

கோட் வரவேற்பை அடுத்து ரிலீஸுக்குத் தயாராகும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம்!

vinoth

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:55 IST)
சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா  கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக்  களமிறங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.

இதனால் வெங்கட்பிரபு மாநாடு, மன்மதலீலை மற்றும் கோட் என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இப்போது விஜய் நடிப்பில் அவர் இயக்கி வெளியாகியுள்ள கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் பார்ட்டி படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பளர் டி சிவா தெரிவித்துள்ளார்.

அதில் “விரைவில் படத்தின் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீஸ் செய்யவுள்ளோம். படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்தமே இல்லாமல் 700 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த ஸ்ட்ரீ 2!