Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் இயக்கத்தில அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்… வெங்கட்பிரபு பகிர்ந்த ரகசியம்!

என் இயக்கத்தில அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்… வெங்கட்பிரபு பகிர்ந்த ரகசியம்!
, செவ்வாய், 22 ஜூன் 2021 (16:20 IST)
மாநாடு படத்தின் குழுவினர் கலந்துகொள்ளும் டிவிட்டர் ஸ்பேஸ் உரையாடல் நேற்று நடந்தது.

நேற்று ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் ‘நான் இயக்கியதிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் மாநாடுதான். மங்காத்தா படத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது’ எனக் கூறியுள்ளார். மாநாடு படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிட்டர் ஸ்பேஸில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்… இத்தனை பேர் கலந்து கொண்டார்களா?