இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தை பாராட்டி ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் பேசினார்.
அண்ணாத்த வெற்றியா தோல்வியா என்றே தெரியாத நிலையில் ரஜினி இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தை இயக்கப் போவது யார் என்று இதுவரை தெரியவில்லை. பட்டியலில் தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பாண்டிராஜ் ஆகியவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தைய பிளாக்பஸ்டர் படமான மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவின் பெயரும் புதிதாக அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாம்.