Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லேஜ் சூப்பர் ஸ்டார் விமலின் ரெண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!

வில்லேஜ் சூப்பர் ஸ்டார் விமலின் ரெண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!
, சனி, 8 ஏப்ரல் 2023 (07:49 IST)
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.  அதனை மறுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய இரண்டு படங்களும், ஏப்ரல் 21 ஆம் தேதி ஒரே நாளில்ரிலீஸ் ஆக உள்ளன. சமீபத்தில் தெய்வ மச்சான் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தாரா எஃபெக்ட் போல… ஃபுல் மேக்கப்பில் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!