வ கௌதமனின் ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி வழக்கு!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (10:39 IST)
இயக்குனர் வ கௌதமன் முரளி நடிப்பில் உருவான கனவே கலையாதே திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆனவர். அதன் பின்னர் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை என்றாலும், அரசியலில் பரபரப்பாக கருத்துகளை தெரிவித்து பிரபலம் ஆனார்.

இந்நிலையில் தற்போது அவரே ஹீரோவாக நடித்து படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கினார். இந்த சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்த படம் நேற்று ரிலீஸானது.

இந்த படத்தில் கராத்தே ராசா வீரப்பனின் அடையாளத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். அதில் “எனது கணவர் வீரப்பனின் தோற்றம் போலவே மீசை வைத்த நபர் காணப்படுகிறார். எனது கணவரின் தோற்றத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னால் என்னிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெறவில்லை. இதனால் எனது கணவரின் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த படத்தைத் திரையிட தடைவிதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மனைவி இல்லாவிட்டால் ‘காந்தாரா’ படமே இல்லை: ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் மார்வெலஸ் க்ளிக்ஸ்!

சிவப்பு நிற உடையில் ஒய்யாரப் போஸில் அசத்தும் மாளவிகா மோகனன்!

41 குடும்பங்களுக்கும் விஜய் மகனாக இருக்க வேண்டும்… பிரபல நடிகர் கருத்து!

பிரேம்குமாரின் அடுத்த படம் ‘ஆவேஷம்’ போல இருக்கும்… தயாரிப்பாளர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments