Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

Advertiesment
HIT 4 First Look

Prasanth Karthick

, திங்கள், 26 மே 2025 (08:00 IST)

நேற்று நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ஹிட் படக் குழுவினர் வெளியிட்ட போஸ்டர் வைரலாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் அமீரின் ‘பருத்தி வீரன்’ மூலமாக அறிமுகமாகி, பையா, மெட்ராஸ், நான் மகான் அல்ல, சிறுத்தை என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி. கதை தேர்விலும், நடிப்பிலும் தொடர்ந்து தனித்துவம் காட்டி வரும் நடிகர் கார்த்தி படங்கள் என்றாலே திரையரங்கம் செல்லலாம் என்ற அளவிற்கு அவருக்கு இளைஞர்கள், குடும்ப ஆடியன்ஸ் இடையே நல்ல பெயர் உள்ளது.

 

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் கார்த்தி, தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஹிட் திரைப்பட வரிசையில் 4வது படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான நானி நடித்த ஹிட் 3 படத்திலேயே போஸ்ட் க்ரெடிட் சீனில் ஏசிபி வீரப்பன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தியை அறிமுகம் செய்திருந்தார்கள்.

 

இந்நிலையில் ஹிட் 4 படத்தின் கார்த்தியின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கார்த்தி பிறந்தநாளில் வெளியிட்டுள்ளது படக்குழு. நானி நடித்த ஹிட் 3 படம் தற்போது சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், கார்த்தி நடிக்க போகும் ஹிட் 4 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!