Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"வாஸ்கோடகாமா" திரைப்பட விமர்சனம்!

J.Durai

, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:31 IST)
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ பா.சுபாஸ்கரன் தயாரித்து ஆர் ஜி கே இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம்"வாஸ்கோடகாமா"
 
இத் திரைப்படத்தில் நகுல்,அர்த்தனா பினு, கே. எஸ்.ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ்,ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி,மதன்பாப்,
நமோ நாராயணா,ஆர். எஸ்.சிவாஜி, லொள்ளு சபா சேஷு,பயில்வான் ரங்கநாதன்,படவா கோபி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
படத்தின் கதாநாயகி அர்த்தனா பினு மிகவும் நல்லவர்.ஒரு நல்லவரை விரும்பி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் அவருடைய அப்பா ஆனந்தராஜ் ,தனது பெண்ணுக்கு ஒரு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
 
ஆனால் நல்லவரான நகுலை, அர்த்தனா   விரும்புகிறார்.தந்தை சொற்படி கேட்பது போல் நம்ப வைத்து திருமணமும் நடக்கிறது.
 
இந் நிலையில் நல்லவரான நகுல் சிறைக்குச் சூழல் உருவாகிறது. 
 
அங்கே சிறையில் அநியாயக்காரர்களுக்கும் நல்லவர்களுக்கும் நடக்கும் முரண்பாடுகளையும்  தர்ம, அதர்மங்களையும் கலந்து நகைச்சுவை முலாம் பூசி காட்சிகள் அமைத்து முழுப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர் ஜி கே.
 
படத்தின் முதல் பாதியில் நகுல் அவரது குடும்பம் அர்த்தனா பினு அவரது குடும்பம் என்று  காட்சிகளால் நகர்த்துகிறார்கள் .
 
படத்தின் இரண்டாவது பாதியில்  வாஸ்கோடகாமா சிறைச்சாலையில் காட்சிகள் விரிகின்றன. 
 
நன்மை செய்தவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள்.
 
சிறையில் உள்ள நல்லவர்களுக்கும் அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தைக் கலகலப்பான நகைச்சுவையாக  மாற்றிக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
 
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கற்பனைகள் மிகை போல் தோன்றினாலும், அதற்குப் பிறகான காலங்களில் நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம். இன்று சொன்னால் நம்ப முடியாத ஆனால் அப்படியே எதிர்காலத்தில் நிகழ இருக்கும் சில அநியாயங்களும் இதில் காட்டப்பட்டுள்ளன.
 
நல்ல மனிதர்கள் எல்லாம் நல்லது செய்து அதற்காக தண்டனை பெற்றுச் சிறைக்குள் நுழையும்போது பெயர்கள் மாற்றி வேறு வித ஆட்களாக மாற்றப்படுகிறார்கள்.அப்படி கப்பர், மார்கோ, ஜாக், பினு, பீட்டர் இன்றைய ஏகப்பட்ட பாத்திரங்கள் வருகின்றன.
 
சாக்லேட் பாயாக அறியப்பட்ட நகுல் இதில்  நல்லவர் போலவும் முரட்டுத் தோற்றத்திலும் வருகிறார். 
 
சிறைக்கு வெளியே அவருக்கு வாசுதேவன் என்பது பெயர். உள்ளே சென்றதும் ஜாக் ஆகிறார். அழகான தோற்றம் அப்பாவித்தனமான சிரிப்பு என்று லட்சணா பாத்திரத்தில் வரும் நாயகி அர்த்தனா பினுவுக்குப்  பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல் எதிர்மறை நிழல் படிந்த கோவர்தன் பாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா வருகிறார்.சாமியார் வேடத்தில் வந்து வில்லத்தனம் செய்கிறார்.
 
படத்தில் ஏராளமாக நடிகர்கள் வருகிறார்கள்.  அனைவருக்கு மே பளிச்சிடும்படியான காத பாத்திர வாய்ப்புகள் இல்லாததால்  மேலோட்டமாகத் தோன்றுகிறார்கள்.
 
படத்தின் முதல் பாதியில் அசட்டுத்தனமான காட்சிகளால் நெளிய வைப்பவர்கள், இரண்டாம் பாதியில் நம்மைத் தேற்றி விடுகிறார்கள்.
 
இதே கதையை மிகவும் சீரியஸாகவும் எடுத்திருக்கலாம் .
அதிரடி நகைச்சுவையாகவும் மாற்றி இருக்கலாம்.  
 
நல்ல வேளை இரண்டாம் பாதியில் சற்று கலகலப்பான காட்சிகள் இடம்பெற்றுப் படத்தைக் காப்பாற்றியுள்ளது.
 
படத்தின் பட்ஜெட்டுக்கும் கதைக்கு ஏற்ற சதீஷ்குமாரின்  ஒளிப்பதிவும் அருணின் இசையும் அமைந்துள்ள விதம் அருமை.
 
இயக்குநர் தான் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்த . அதன் மூலம் தனது போதாமையை உணர வைத்துள்ளார்.
 
மொத்தத்தில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமால்  சிரிப்பை மட்டுமே விரும்பும் விரும்பிகள் "வாஸ்கோடகாமா" செல்லலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ’சர்தார் 2’ படத்தின் நாயகி இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!