Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 21 ஜூன் 2023 (07:01 IST)
இயக்குனர் வசந்தபாலன் அங்காடித் தெரு மற்றும் வெயில் போன்ற தரமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய அரவான், காவியத்தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.

சில ஆண்டுகளாக பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அநீதி படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளது. இந்நிலையில் இப்போது அநீதி திரைப்படம் ஜூலை 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்! - உதயநிதி