Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த தமிழ்ப் படத்தில் நடித்துள்ளாரா வருண் சக்ரவர்த்தி?

Advertiesment
அந்த தமிழ்ப் படத்தில் நடித்துள்ளாரா வருண் சக்ரவர்த்தி?

vinoth

, புதன், 12 மார்ச் 2025 (12:54 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த தொடரில் மிகச்சிறப்பான பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ர்வர்த்தி. கடைசி நேரத்தில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்ற அவர் மொத்தம் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வருண், சர்வதேசக் கிரிகெட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் கிரிக்கெட்டைப் பற்றிய ‘ஜீவா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாதது. விஷ்ணு விஷால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஜீவா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தகக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?