Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்க்கு மேலும் ஒரு வில்லன்… தளபதி 67 படத்தில் இணையும் மிஷ்கின்?

விஜய்க்கு மேலும் ஒரு வில்லன்… தளபதி 67 படத்தில் இணையும் மிஷ்கின்?
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:53 IST)
இயக்குனர் மிஷ்கின் தளபதி 67 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில்  முக்கிய வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டியூண்டு குவாண்டத்திற்குள் சிக்கிய சூப்பர்ஹீரோ ஃபேமிலி! - Quantumania Trailer!