Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரீமேக் படத்துக்கு 47 விருதுகள்… பாராட்டுலன்னு புலம்பும் ஆர் கே சுரேஷ்!

ரீமேக் படத்துக்கு 47 விருதுகள்… பாராட்டுலன்னு புலம்பும் ஆர் கே சுரேஷ்!
, செவ்வாய், 22 நவம்பர் 2022 (16:03 IST)
ஆர் கே சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் திரைப்படம் வெளியாகி பெரிதும் கவனம் பெறாமல் போனது.

பாலாவின் பி ஸ்டுடியோ ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை தயாரித்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்தது. இந்த படம் மலையாள படமான ஜோசப்பின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த விசித்திரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் சில திரைப்பட விழாக்களில் 47 விருதுகள் வென்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக பேசிய ஆர் கே சுரேஷ் ”47 விருதுகளை விசித்திரன் திரைப்படம் வென்றுள்ளது. வேறு மொழி நடிகர்கள் எல்லாம் அழைத்து பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்து யாருமே பாராட்டவில்லை” என்று புலம்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டில் நடக்க இருந்த இளையராஜா கச்சேரி நிறுத்தம்?