Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரிசு படத்தின் சிங்கிள் ரிலீஸ் அப்டேட் கொடுத்த தமன்!

வாரிசு படத்தின்  சிங்கிள் ரிலீஸ் அப்டேட் கொடுத்த தமன்!
, புதன், 19 அக்டோபர் 2022 (10:17 IST)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த படத்தின் பாடல் ஒன்றை படமாக்கும் காட்சி இணையத்தில் லீக் ஆகி மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “தீபாவளிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மல்லுவுட்டில் கால் பதிக்கும் ஜோதிகா; அதுவும் மம்முட்டியுடன்…!