‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

Bala
புதன், 19 நவம்பர் 2025 (20:23 IST)
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது வாரணாசி. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ருத்ரன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இது ஒரு ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் படமாக தயாராகியிருக்கிறது. பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் மெயின் வில்லனாக நடித்திருக்கிறார். 

 
சமீபத்தில்தான் வாரணாசி படத்தின் டிரெய்லர் வெளியானது. ருத்ரனாக காளையில் மகேஷ்பாபு வரும் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ராஜமௌலி இயக்கத்தில் ஏற்கனவே பாகுபலி  மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் பெரிய வசூலை ஈட்டியது. அந்த வகையில் வாரணாசி படமும் பெரிய வசூலை எதிர் நோக்கி காத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் புதிய தொழில் நுட்பத்தை தெலுங்கு சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராஜமௌலி.
 
அதற்கேற்ப டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட காளை மீது மகேஷ் பாபு அமர்ந்து  வந்தார். ஆனால் அதுதான் இப்போது வரைக்கும் ட்ரோல் மெட்டிரீயலாக மாறியிருக்கிறது. எப்பேற்பட்ட நடிகர் மகேஷ்பாபு. அவரை மேடையில் ஒரு காமெடி பீஸாக மாற்றிவிட்டாரா ராஜமௌலி என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர். அந்த மாடு மட்டும்தான் பொம்மையா? இல்ல மகேஷ்பாபுவும் பொம்மையா என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் காளை மாடு மீது மகேஷ்பாபு அமர்ந்து வந்தாலும் அதெல்லாம் டெக்னாலஜி மாடு. கோலிவுட்டில் நிஜ மாட்டோடு எங்க ஹீரோக்கள் நேருக்கு நேர் சண்டை போட்டிருக்கின்றனர் தெரியுமா என நெட்டிசன்கள் கோலிவுட்டில் காளை மாட்டுடன் சண்டை போட்ட நடிகர்கள் நடித்த படங்களை லிஸ்ட் போட்டு காட்டியுள்ளனர். அந்த வகையில் மருத நாயகன் படத்தில் காளை மாட்டில் ஏறிதான் கமல் போவார்.
 
அதே போல் அப்பவே ரஜினி முரட்டுக்காளை படத்தில் காளையுடன் சரி மல்லுக்கட்டுவார். பிரண்ட்ஸ் படத்தில் காளை மாட்டு வண்டி போட்டியில் கடைசியாக விஜய் வந்து ஜெயிப்பார். அந்நியன் படத்திலும் காளை மாட்டில் விக்ரம் ஏறி வருவார். ராமராஜனும் எங்க  ஊரு பாட்டுக்காரன் படத்தில் காளையுடன் போட்டி போடுவார். கோயில் காளை படத்தில் விஜயகாந்த், வாடிவாசல் படத்தில் சூர்யா என காளை மாட்டுடன் தொடர்பு படுத்தி நடித்து விட்டார்கள் என சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments