Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாஸ்லியாவுக்காக கவின் எழுதிய பாடல்

Advertiesment
லாஸ்லியாவுக்காக கவின் எழுதிய பாடல்
, செவ்வாய், 2 ஜூலை 2019 (21:57 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் வனிதாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. ஊக்கம் தரும் பேச்சு ஒன்றை மதுமிதா பேச வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, மதுமிதாவோ தனக்கு ஊக்கம் தரும் பேச்சு பேசும் அளவுக்கு வயதில்லை, அதனால் எனக்கு நடந்த அனுபவங்களை சொல்வதாக கூறினார். மதுமிதா பேச ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் குறுக்கிட்ட வனிதா, நீ பேசுவது தவறு, இதெல்லாம் பேசக்கூடாது என்று கோபப்பட, அதற்கு மதுமிதா பதிலடி கொடுக்க, மதுமிதாவுக்கு மீராமிதுன் சப்போர்ட் செய்ய ஒரே களேபேரமாகிவிட்டது
 
webdunia
ஒருபக்கம் மதுமிதா, வனிதா சண்டை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் இன்னொரு பக்கம் லாஸ்லியாவை கரெக்ட் செய்யும் முயற்சியில் கவின் ஈடுபட்டிருந்தார். கவின் ஒரு பாடலை மெட்டமைத்து பாட, அதற்கேற்ப லாஸ்லியா நடனம் ஆடினார். கவின் பாடிய பாடல் இதுதான்
 
அடியே லாஸ்லியா
என்னை பாத்தியா
கண்டுக்க மாட்றியே
ஒன் மனசு காஸ்ட்லியா
 
காதலை சொன்னேனே
கருணை காட்டினியே
சோகமா இருந்தேனே
பாவம் பாத்தியா
 
இந்த பாடல் சூப்பராக இருந்ததாக லாஸ்லியா கூற உடனே பாடலை மீண்டும் தொடர்ந்த கவின் 
 
பாட்டு நல்லா இருந்துச்சுன்னுன்னு சொன்னியே
ஆனா என்னை உட்டுட்டியே
 
என்று பாட அவரை சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன் !