Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை யாஷிகாவிற்கு வனிதா அறிவுரை!

Advertiesment
நடிகை யாஷிகாவிற்கு வனிதா அறிவுரை!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (23:36 IST)
நடிகை யாஷிகாவிற்கு வனிதா அறிவுரை கூறியுள்ளார்.

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார்.

 
இந்நிலையில், இந்த விபத்து நடிகை யாஷிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். நான் மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாக பலரும் புரளி கிளப்பி வருகின்றனர். நான் மது அருந்தவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். நான் மது அருந்திருந்தால் சிறையில் இருந்திருக்க நேரிடும். நான் உடல்நலம் தேறி நடக்க குறைந்தது 5 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்திற்கு நடிகை வனிதா அறிவுரை கூறியுள்ளார். இந்த விபத்து யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நன்றாக ஓய்வெடுத்து உன் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்….நீ இந்த விபத்தில் நீ பிழைத்திருக்க காரணம் இருக்கிறது…இறைவன் உன்னை ஆசீர்வதிபாராக…உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்காக நீ உன்மீது குறை சொல்லாதே எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ’’அண்ணாத்த’’ படம் முக்கிய அப்டேட் !