Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை யாஷிகா விபத்து நடக்க காரணம்? ஆண் நண்பர் வாக்குமூலம்

Advertiesment
நடிகை யாஷிகா விபத்து நடக்க காரணம்? ஆண் நண்பர் வாக்குமூலம்
, வெள்ளி, 30 ஜூலை 2021 (23:32 IST)
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்   நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாகவும், யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து நடந்த அந்த காரில் இவர்கள் இருவரைத் தவிர இரண்டு ஆண்கள் இருந்ததாகவும், அவர்கள் யார் என்பது வெளியே வரவே இல்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் யாஷிகாவுடன் பயணித்த 2 ஆண் நண்பர்களில் ஒருவர் நந்தகுமார். அவர் விபத்து குறித்து யாஷிகாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டபின் அதை போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகக் சொல்லப்படுகிறது.

இந்த விபத்தும் நடிகை யாஷிகா ஆனந்த் காரை வேகமாக இயக்கியதால்தான் ஏற்பட்டது எனத் தெரிகிறது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை யாஷிகா மருத்துவமனையில்  தீவிரச் சிகிச்சை பிரிவில்  இருந்து சாதாரணவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடலநலம் முன்னேற்றம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ருதிஹாசன் வயிற்றில் காதலர் வரைந்த ஓவியம்