Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Advertiesment
வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:49 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் எந்த காரணத்துக்காக அனுப்பி வைத்தாரோ, அந்த காரணத்தை நேற்று முதல் சரியாக செய்து வருகிறார் வனிதா. 
 
நேற்றைய ஓபன் நாமினேஷன் படலத்தின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை, கவின் தலைமையிலான அணியும் சும்மா விட்டுவிடவில்லை. நேற்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பயங்கரமான வாக்குவாதம் இன்றும் தொடர்கிறது 
 
இன்றைய முதல் புரமோ வீடியோவில் வாட் நான்சென்ஸ் பிக்பாஸ் என ஆத்திரமாக கூறிய வனிதா மைக்கை கட்டி தொங்க விடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேரனுக்கும் ஷெரினுக்கும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல தகுதி இல்லையா? என ஆவேசமாக பொங்குகிறார் வனிதா.
 
இந்த நிலையில் எமோஷனல் என்றால் என்னவென்று தெரியாத வனிதாவை நினைத்து பரிதாபப்படுவத? ஆத்திரப்படுவதா? என்று தெரியாமல் கவின் குழுவினர் உள்ளனர்.  இருப்பினும் வனிதாவுக்கும் கவின் குழுவினர்களுக்கும் இந்த வாரம் முழுவதும் பயங்கர பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!