தயாரிப்பாளரே ஹீரோவாகும் படத்தில் வாணிபோஜன்!
தயாரிப்பாளர் ஒருவரே ஹீரோவாகும் படத்தில் வாணிபோஜன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஓ மை கடவுளே என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் வாணி போஜன். இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததை அடுத்து அவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் கேசினோ. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை மார்க் ஜோல் என்பவர் இயக்கி வருகிறார்
இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜோடியாக நடிக்க இருப்பவர் வாணிபூஜன் என்பது குறிப்பிடதக்கது இன்றைய பூஜயிலும் வாணிபூஜன் கலந்து கொண்டார் இந்த படத்திற்கு கேசினோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வைரலாகி வருகிறது