Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (07:42 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாவதால் அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் அதிக நாட்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் இணைந்து நடிக்க நீண்ட நாள் ஆசை- கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்