Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரைப்பயணத்தின் உத்வேகம் நடிகர் அஜித் - வாழ்த்திய வலிமை வில்லன்!

Advertiesment
திரைப்பயணத்தின் உத்வேகம் நடிகர் அஜித் - வாழ்த்திய வலிமை வில்லன்!
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:31 IST)
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அஜித் சினிமா துறைக்கு வந்து 28 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இதற்கான காமன் டிபி வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.

மேலும், அஜித்தின் திரைப்பயணத்தையும் அவரது வெற்றிகளையும் குறித்து பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வில்லன்களில் ஒருவரான கார்த்திகேயா என்ற தெலுங்கு  நடிகர் அஜித்தை குறித்து பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

அதில், சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் அஜித். பல கஷ்டங்களையும் தோல்விகளையும் எதிர்கொண்டு ஒவ்வொரு முறையும் வலுவாக வெளிப்பட்டு தமிழ் சினிமாவின் 'தல' ஆகி இருக்கிறார். அஜித்தின் சினிமா பயணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் உத்வேகமாக எடுத்துக்கொள்ளலாம். சினிமாவில் 28 வருட பயணத்தை நிறைவு செய்ததற்கு என் இனிய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ரொம்ப போர்.... வேற ஏதாச்சும் செய்யுங்க - லாக்டவுனில் பரிதவிக்கும் இணையவாசிகள்!