Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தல அஜித் தடம் பதிக்க காத்திருக்கிறோம் - அஜித் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

Advertiesment
தல அஜித் தடம் பதிக்க காத்திருக்கிறோம் - அஜித்  ரசிகர்கள் போஸ்டரால்  பரபரப்பு
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:30 IST)
நடிகர் அஜித் குமார் தடம் பதிக்கக் காத்திருக்கிறோம் என்று மதுரை மாவட்டத்தில் அஜித்தின் ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை குறித்து ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்  சில வருடங்களுக்கு முன் தனது ரசிகர்கள் மன்றங்களைக் கலைத்தார். ஆனாலும் அவருக்கு தழிழகத்தில் ரசிகர் மன்றங்கள் அதிகாக உள்ளது. கடந்த வருடம் தனக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு  தன்னைக் குறித்துப் பரவி வந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்து சினிமாவிலும் துப்பாக்கி சுடுதலிலும், ட்ரோம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித் சினிமா துறைக்கு வந்து 28 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல மேடை ஏறாமல் அந்த அரசியலே பேசும் அதான் எங்க தல மனித கடவுள் அஜித்பக்தர்கள் – மன்றம் எனப் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட் பிரபுவின் "லாக்கப்" படம் உருவான விதம் குறித்த வீடியோ!