Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை மாதம் வெளியாகிறதா வலிமை ஃபர்ஸ்ட் லுக்!? – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

ஜூலை மாதம் வெளியாகிறதா வலிமை ஃபர்ஸ்ட் லுக்!? – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (12:20 IST)
அஜித் நடித்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் தற்போது ஜூலை மாதம் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர்.

சமீபத்தில் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தங்களுக்கு வலிமை ஃபர்ஸ்ட்லுக் வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜூலை மாதத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. அதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #ValimaiFirstLookOnJuly என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப் சீரிஸில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா… இயக்குனர் இவர்தான்!