Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்கும் இடம் இதுதான்!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (15:56 IST)
வலிமை படத்தின் படப்பிடிப்பு இப்போது புனேவில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தை பற்றிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளிவரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது வலிமை படத்தின் முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமானக் காட்சிகளை முன்பு ஐரோப்பிய நாடுகளில் எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் இப்போது புனேவில் அந்த காட்சிகளை படமாக்கி வருகிறாராம் இயக்குனர் ஹெச் வினோத். விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்புகளையும் நடத்தி மொத்த படத்தையும் முடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments