Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 18 ஜனவரி 2025 (14:55 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம்சேஞ்சர் ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களைப் பெற்று ஷங்கருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரும் சினிமா பத்திரிக்கையாளருமான அந்தணன் ஒரு நேர்காணலில் பேசும்போது “வேள்பாரி திரைப்படம் வரவே வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போதிருக்கும் நிலையில் ஷங்கரை நம்பி அவ்வளவு பணம் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய அடுத்த படம் வேள்பாரிதான் என்று ஷங்கர் கூறியுள்லார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்தின் லாபத்தில் பங்கு… லைகா நிறுவனத்தை வைத்து செய்த ஹாலிவுட் பட நிறுவனம்!

நிலடுக்கம் வந்தால் கூட ரெண்டு நாளில் மறந்துடுவாங்க.. ஆனா என் நடுக்கம்… விஷால் ஜாலி பதில்!

விடாமுயற்சி என்னோட கதை இல்லை… ஹாலிவுட் பட ரீமேக் சம்மந்தமான கேள்விக்கு மகிழ் திருமேனி பதில்!

மிடில் க்ளாஸ் ‘குடும்பஸ்தன்’ ஆக மணிகண்டன்… இன்று வெளியாகும் டிரைலர்!

பரோட்டாவில் வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி… பாண்டிராஜ் படம் பற்றி கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments