Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமான் மகனுக்கு கவிதையால் வாழ்த்து கூறிய வைரமுத்து!

Advertiesment
vairamuthu
, செவ்வாய், 31 மே 2022 (11:00 IST)
சீமான் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கவிதை தற்போது வைரலாகி வருகிறது 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு ஒரு மகன் உள்ளார் 
 
அவர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து, சீமான் மகனுக்கு எழுதிய வாழ்த்து கவிதையில் கூறியிருப்பதாவது:
 
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
 
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
 
தமிழாற்றுப்படையோடும் 
தமிழர் படையோடும்
வா மகனே!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானை ப்ரஸ் மீட்டில் திடீர்னு கெட்டவார்த்தை பேசி ஜர்க் ஆன இயக்குனர் ஹரி!