இந்த மூன்றில் ஒன்றை செய்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் பரவி 2 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்று விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் திணறி வருகின்றனர்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு சில நாடுகள் அறிவித்த போதிலும் அதிகாரபூர்வமாக இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள மூன்று வழிகள் இருப்பதாக கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மூன்றே தீர்வுகள்;
கொரோனா கொல்லுயிரி
தானே அழிவுறுதல்
அல்லது
வருமுன் காக்கவும் வந்தபின்
போக்கவும் மருந்தறிதல்
அல்லது
மழைத்துளிகளின் இடுக்கில்
நனையாமற் பறக்கும் கொசுவைப்போலக்
கொல்லுயிரிக்குச் சிக்காமல்
வாழ்முறை வகுத்தல்.
நான் அறிவியலை நம்புகிறேன்
கவிஞர் வைரமுத்துவின் இந்த டுவிட் குறித்து ரசிகர்களும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து கூறியது போலவே நாங்களும் அறிவியலை நம்புகிறோம் என்று தான் பெரும்பாலானோர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது