இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா புதிய பாதிப்புகள் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த பல மாதங்களாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை முடிவில் மத்திய அரசு ஊரடங்கை ரத்து செய்தது. அதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகாமான பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,06,348 லிருந்து 31,67,323 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57,542 லிருந்து 58,390 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 23.38 லட்சத்திலிருந்து 24 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
மேலும், இந்தியாவில் ஒரே நாளில் 60,975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 66,550 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றால் 848 பேர் பலியாகியுள்ளனர்.