ஒரு பாடல் இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என்று இசைஞானி இளையராஜா கூறிவரும் நிலையில் எழுதிய பாடலாசிரியருக்கே சொந்தம் என்று வைரமுத்து கூறி வருவது கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று மே தின வாழ்த்து பாடலை பதிவு செய்த வைரமுத்து இந்த பாடல் இளையராஜாவுக்கோ, எனக்கோ இந்த பாடலை பாடிய ஜேசுதாஸுக்கு மட்டும் சொந்தம் அல்ல உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் சொந்தம் என்று பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரமுத்துவின் இந்த பதிவு எதோ.
உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை
எழுத்து வைரமுத்து
இசை இளையராஜா
குரல் ஜேசுதாஸ்
இந்தப் பாட்டு
இந்த மூவருக்கு மட்டுமல்ல
உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம்