Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகனே மதன்கார்க்கி, உயர உயர மண்பார்த்து நட...: வைரமுத்து வாழ்த்து!

மகனே மதன்கார்க்கி, உயர உயர மண்பார்த்து நட...: வைரமுத்து வாழ்த்து!
, திங்கள், 21 மார்ச் 2022 (09:34 IST)
மகனே மதன்கார்க்கி, உயர உயர மண்பார்த்து நட...: வைரமுத்து வாழ்த்து!
மகனே மதன்கார்க்கி, உயர உயர மண் பார்த்து நட என மதன் கார்க்கிக்கு அவரது தந்தையும் கவிஞருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
மதன் கார்க்கி வசனம் எழுதிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது
 
இதனை அடுத்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மகனே மதன்கார்க்கி!
 
RRR - திரைப்படத்தில்
நீ உரையாடலும் பாடலும்
தீட்டியிருப்பது மகிழ்ச்சி
 
பெரும்படைப்பில்
பங்குபெறுவது பெருமிதம்
 
ஓர்
அனுபவத்தை மறக்காதே!
 
ஒரு படைப்பில்
உழைப்பை நிறைவாகக் கொடு
வெற்றியில் குறைவாக எடு
 
ராஜமெளலிக்கு 
என் வாழ்த்தினைச் சொல்
 
உயர உயர
மண்பார்த்து நட...
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்க தேர்தல்: பாண்டவர் அணி அபார வெற்றி!