Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை: வைரமுத்து கண்டனம்!

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை: வைரமுத்து கண்டனம்!
, வியாழன், 12 நவம்பர் 2020 (11:03 IST)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அருந்ததி ராய் புத்தகம் ஏபிவிபி போராட்டத்தை தொடர்ந்து நீக்கப்பட்டது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில் பத்திரிக்கையாளர் அருந்ததிராய் எழுதிய “Walking with the Comrades” என்ற புத்தகம் பாடமாக இருந்த்து. ஆனால் இந்த புத்தகத்தில் நக்சலைட்டுகள் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த்தை அடுத்து அந்த குறிப்பிட்ட பாடம் நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் அருந்ததிராய் பாடத்தை நீக்கியதற்கு கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில்
அருந்ததிராய் படைப்பு
நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.
 
அறிவுத்துறையை அரசியல்
சூழ்வது அறமில்லை.
 
சாளரத்தை மூடிவிட்டால்
காற்றின் வீச்சு நிற்பதில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொகுப்பாளினியாக மாறிய சமந்தா - கவனத்தை ஈர்க்கும் வீடியோ