Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரரை போற்று: பாசிட்டிவ் விமர்சனங்கள் தரும் டுவிட்டர் பயனாளிகள்!

சூரரை போற்று: பாசிட்டிவ் விமர்சனங்கள் தரும் டுவிட்டர் பயனாளிகள்!
, வியாழன், 12 நவம்பர் 2020 (07:54 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப்போற்று திரைப்படம் அதிகாரப்பூர்வமாக இன்று ரிலீசாக இருந்த நிலையில் நேற்று இரவே ஒரு சில நாடுகளில் ரிலீசாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது 
 
நேற்றே டிவிட்டர் பயனாளிகள் பலர் இந்த படத்தை பார்த்து சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் திரைக்கதையையும் பாராட்டி வருகின்றனர். ஒரு சாதாரண இளைஞன் எப்படி விமான நிறுவன அதிபர் ஆகிறார் என்பதும் அதற்கு பணம் கொழுத்த முதலைகள் என்னென்ன இடையூறுகள் செய்கிறார்கள் என்றும் அரசு அதிகாரிகள் தரும் தொல்லைகள் என்னென்ன என்பது குறித்த திரைக்கதையை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார் சுதாஎன்றும் டிவிட்டர் பயனாளிகள் பாராட்டுகின்றனர்
 
அதுமட்டுமன்றி சூர்யாவின் நடிப்பும் அதற்கு இணையாக அபர்னா பாலகிருஷ்ணாவின் நடிப்பு மற்றும் துணை நடிகர்களின் நடிப்பும் மிக அபாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஜீவி பிரகாஷின் அற்புதமான இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவை மிகச் சிறப்பாக இருப்பதாகவும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர் 
 
மொத்தத்தில் சூர்யாவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக சூரரைப்போற்று அமைந்துள்ளதாகவும் டிவிட்டர் பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சூரரைப் போற்று ’படம் ’அமேசான் பிரைமில் ரிலீசானது... படக்குழுவுக்கு வாழ்த்துகள் கூறிய கார்த்தி !